Friday, July 2, 2010

அவன் மட்டும்...


சி வருடங்களுக்கு முன்
நான் அவனை
நேருக்கு நேர் சந்தித்தேன்.
அவன் மட்டும் ஒத்துழைத்தால்
நிறைய நிறைய
சாதிக்க முடியும் என்று
தெரிந்து கொண்டேன்.
ஆனால்
அவனிடம் கொஞ்சம்
அறியாமை இருந்தது,
அறிய வைத்தேன்.
சோம்பேறித்தனம் இருந்தது,
சுறுசுறுப்பை ஊட்டினேன்.
அகந்தை இருந்தது,
அகற்றினேன்.
மெல்ல மெல்ல அவன் வளர்ந்து
ஆளானான்.
என்னை ஆளாக்கினான்.
சொல்லிக் கொண்டேன் நன்றி
அவனாகிய எனக்கு!




10 comments:

வெங்கட் நாகராஜ் said...

Excellent!

இராகவன் நைஜிரியா said...

// சொல்லிக் கொண்டேன் நன்றி
அவனாகிய எனக்கு! //

அந்த கடைசி இரண்டுவரி... கலக்கலோ கலக்கல்.

vasu balaji said...

Superb. Why dont you submit in tamilmanam sir.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

CS. Mohan Kumar said...

Self help is said to be the best help.

Rekha raghavan said...

'நச்'சென்று ஒரு கவிதை.

ரேகா ராகவன்.
(now from Newyork)

ரிஷபன் said...

கவிதை மிக அருமை.. ஆஹா.. மிகவும் ரசித்தேன்

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை புதுமை வரிகளில் . பகிர்வுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

R.Gopi said...

//மெல்ல மெல்ல அவன் வளர்ந்து
ஆளானான்.
என்னை ஆளாக்கினான்.
சொல்லிக் கொண்டேன் நன்றி
அவனாகிய எனக்கு! //

ஜனா சார்... பிரமாதம்...

இது தான் உங்கள் டச்... நச் டச்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!