Tuesday, September 4, 2012

கிடைக்காமல் இருக்காது...



அன்புடன் ஒரு நிமிடம் - 15

கிடைக்காமல் இருக்காது...

ஹா, இதுவரை மூணு பேர் மண்டையை உடைச்சு யோசிச்சுப் பார்த்திட்டாங்க. முடியலே ஒரு விளக்கத்தைக் கண்டுபிடிக்க, அவங்களால! என்றான் கிஷோர்.

மூணு பேராலேயும்னா ஆச்சரியம்தான்.”

இப்ப நீங்க கேட்ட இதே கேள்வியைத்தான் அவங்களும் கேட்டாங்க. நீங்களே யோசித்து ஏன்னு காரணத்தைக் கண்டுபிடியுங்களேன்னேன். Were not able to. அவங்களால முடியலே. அத்தனைக்கத்தனை நல்லதுதான்னு நானும் சொல்லாமலே விட்டுட்டேன்.

ராகவ் தலையை சொறிந்துகொண்டார். இவன் தத்துபித்துன்னு ஏதோ பண்ணி வெச்சிட்டு அதுக்கு நம்மை காரணம் கண்டுபிடிக்க சொல்றானே?
ஊகித்த கிஷோர், பி.எஸ்.வீரப்பா போல சிரித்தான். கேட்டது நீங்க தானே?”

உண்மைதான். என்னமோ ஏகப்பட்ட பணம் கொடுத்து ஒரு ஆடியோ சிஸ்டம் வாங்கி செட் பண்ணியிருக்கியாமே உன் அறையில? நான் இன்னும் பார்க்கவே இல்லையே?” என்று கேட்டது அவர்தான்.

வாங்க, இப்பவே பார்த்துடலாம்,” கையோடு அழைத்துப் போய்விட்டான்.

கேட்க திவ்யமாக இருந்தது. தேனாக ஒலித்தன பாடல்கள். அறையின் நடுவே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கேட்டபோது நெருடல் ஒன்று எழுந்தது. வலது பக்கம் வால்யூம் அதிகமாக வெளிப்பட்டது ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. ஓ, இடது புறமிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வலதை விடவும் சற்றே தள்ளியிருந்த மாதிரி... மாதிரி என்ன, தள்ளித்தான் இருந்தது.

ஏண்டா இப்படி? சரியா அளந்து பார்த்து ஃபிக்ஸ் பண்ணலியா? அல்லது சோபா தான் இடம் மாறிவிட்டதா?”

அதெல்லாமில்லை. டெலிப்ரேட்டா பண்ணினதுதான் அது. அப்படி செய்ய எனக்கே எனக்குன்னு உள்ள அந்தக் காரணத்தை ஊகிக்க முடியுமா உங்களால?”

ஊகித்ததில் மண்டை காய்ந்ததுதான் மிச்சம். ஒவ்வொன்றாக சொல்ல எல்லாமே தவறென்றான். உள்ளே இருக்கும் ஸ்பீக்கரின் கான்ஃபிக்ரேஷனில் உள்ள வித்தியாச சாத்தியதை வரை யோசித்துப் பார்த்துவிட்டார்.

நீயே சொல்லிடேன்.

தயங்கினான். அப்புறம் மெல்ல சொன்னான். அது வந்து.. ஒரு காது எனக்கு சரியா கேக்கறதில்லே. அதனால இந்த ஸ்பீக்கர்களை சரியா பிளேஸ் செஞ்சா எனக்கு ஸ்டீரியோ எஃபக்ட் கரெக்டா கிடைக்கலே. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன். இப்படி வலது ஸ்பீக்கரை டிரயல் அன் எரர் பண்ணிப் பார்த்து என் சோபாவை வலது பக்கம் ஒன்றரையடி தள்ளி வைத்துக் கொண்டேன். எப்படி என் ஐடியா?”

ராகவ் பதிலே சொல்லவில்லை. என்ன மாமா யோசனையில ஆழ்ந்துட்டீங்க?”

ஒண்ணுமில்ல... ஒண்ணு தோணிச்சு எனக்கு

விழித்தன அவன் கண்கள்.

அவர் சொன்னார். அதாவது வெளியிலிருந்து ஒரு நல்ல கருத்தை நாம பெறும்போது அது சரியானதுன்னு அறிவுக்குப் பட்டாலும் கூட பல சமயம் அதை முழுமையா ஏத்துக்க நம்மால முடியாது போகுது இல்லையா? அதுக்குக் காரணம் நம்ம மனசிலிருக்கும் விருப்பமும் - அதை வலது காதுன்னு வெச்சுக்க, நம்ம பொறுப்புணர்வும் - அதை இடது காதுன்னு வெச்சுக்க, ரெண்டும் பாலன்ஸ் சரியில்லாம இருக்கலாம் இல்லையா? அதை உணர்ந்து கொண்டு வலது காதான பொறுப்புணர்வை கொஞ்சம் அதுக்குக் கிட்டத்தில வெச்சுக்கிட்டா, அதாவது அதிகப் படுத்திக் கொண்டால் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட நம்மால முடியும் இல்லையா? அதைத்தான் யோசிச்சிட்டிருந்தேன்.

என் காதை, ஸாரி, கண்ணைத் திறந்திட்டீங்க மாமா!

('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழ்)

<<<>>>

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு உதாரணத்தோடு விளக்கம் அருமை...

Rekha raghavan said...

// “என் காதை, ஸாரி, கண்ணைத் திறந்திட்டீங்க மாமா!”//

எங்களோட அறிவுக்கண்ணையும் அவ்வப்போது திறக்குறீங்க உங்க அருமையான விளக்கங்களால. நல்ல பதிவு.

ரேகா ராகவன்

kaialavuman said...

நல்ல விளக்கக் கதை...

ரிஷபன் said...

அருமையான விளக்கம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கருத்தமைந்த கதை. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான விளக்கம்....

தி.தமிழ் இளங்கோ said...

வலது காது – இடது காது வித்தியாசத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மை. வித்தியாசமான கதை.

Ranjani Narayanan said...

அன்புள்ள திரு ஜனா,
வணக்கம்.
உங்களுடைய இந்தக் கதையை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

வருகை தாருங்கள் ப்ளீஸ்!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான யோசனை ...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!