Monday, September 16, 2013

உருப்படியாக ஒரு விஷயம்....



 அன்புடன் ஒரு நிமிடம் - 44

ந்த உலகம் எங்கே உருப்பட போகுது?” அலுத்துக் கொண்டான் நரேஷ். விழித்தார் சாத்வீகன். இதை ஏன் இங்க வந்து, இப்ப சொல்றான்?

அவர்கள் நின்றிருந்தது பீச்சில்.

இத பாருங்க, இப்படிக் குப்பை கூளங்களை அள்ளி இறைச்சிருக்காங்க கடற்கரை நெடுக! எத்தனை சுத்தமா இருக்க வேண்டிய இடம்! எத்தனை சுத்தமா இயற்கை வழங்கிய இடம்! இப்படிப் பாழடிக்கிறாங்களே! இந்த உலகம் உருப்படுமா?”

சாத்வீகன் ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு வாரம் தன்னோடு தங்கவேண்டும் என்று அவரை ஒரு சின்ன டூர் செய்ய அழைத்திருந்தான் பேரன் நரேஷ்.  அவரும் பல நாட் நௌவுக்குப் பிறகு சம்மதித்து வந்திருந்தார்.

இந்த ஏழு நாளும் ரிலாக்ஸ்டா என்னோடு நேரத்தை செலவிடப் போறீங்க!  என்று அறிவித்தவன்... தினம் ஒரு இடம் என்று அழைத்துப் போகத் தொடங்கியவன்...  

வெள்ளை மணற் பரப்பில் காணாமல் போயிருந்த வெள்ளையை குறித்து கவலை மேலோங்க அவன் அலுத்துக் கொள்ள... அவர் கண்ணை ஓட்டினார். ஆங்காங்கே விசிறடிக்கப் பட்டிருந்த பாலிதீன் பைகள்... காலியான கடலைப் பொட்டலங்கள்...

எதுவும் பதிலிறுக்கவில்லை அவர்.

அடுத்த நாள். மகா பெரிய மால் ஒன்றில் நின்றிருந்தார்கள்.

ஊகூம்! தேறவே தேறாது உலகம்!

என்னடா ஆச்சு!

பாருங்க நீங்களே!

பார்வை ஓடிற்று. என்னதான் கோடிகளைக் கொட்டி அதன் சொந்தக்காரர்கள்  சுத்தத்துக்கு மெனக்கெட்டிருந்தாலும், ஐந்தடிக்கு ஒரு இங்கே போடவும் வைத்திருந்தாலும், ஆங்காங்கே கசக்கி எறியப்பட்ட பிஸ்கட் கவர்களும் நசுக்கித் தேய்க்கப்பட்ட பேப்பர் கப்களுமாக அந்த இடத்தை அசுத்தப் படுத்தியிருந்தன.

அங்கும் மௌனமே அவர் பதிலாய் இருந்தது.

மூன்றாம் நாள் புத்தகக் கண்காட்சிக்குப் போனபோதும் சிதறிக் கிடந்த சில குப்பைகள் உலகத்தை அவன் வாயில் உருப்படாமல் போக வைக்கத் தவறவில்லை. ஆனாலும் அவரிடமிருந்து அதற்கு மறுப்பேதும் வரவில்லை.

நாலாம் நாள் அவர்கள் விஜயம் செய்த ஜூவிலும் சுற்று முற்றும் கண்ணை ஒட்டியவன் அங்கே தென்பட்ட குப்பை கூளங்களை சுட்டிக் காட்டி உலகம் உருப்படாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை அடுக்கியபோது அவர் தலையை ஆட்டினாரே தவிர ஒரு வார்த்தை பேச வேண்டுமே?

ஐந்தாம் நாள். இன்றைக்கு அருவியில் குளிக்கப் போகிறோம்...என்றான்.

போய் காலை வைக்க வில்லை. இங்கே பாருங்க! என்றான். குனிந்து நிமிர்ந்தவன் கையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பையும் கந்தல் துணியுமாக... .

அவற்றை கொண்டுபோய் சற்றுத் தள்ளி மரத்தில் கட்டி வைத்திருந்த குப்பைக் கூடை ஒன்றில் போட்டபடியே, இந்த உலகம் உருப்படும்னு நினைக்கிறீங்க நீங்க?”

அவர் வாய் திறந்தார் இம்முறை. கண்டிப்பா உருப்பட்டு விடும்பா!

அவன் புருவங்கள் உயர்ந்தன. ஏன் தாத்தா மூணு நாளா சொல்லாத வார்த்தைகளை இப்ப சொல்றீங்களே? எதை வெச்சு உங்களுக்கு இப்படி ஒரு திடீர் நம்பிக்கை?”

இந்த மூணு  நாள் நீயும் எல்லாரையும் போல அதை குற்றம் மட்டுமே சொன்னாய். அப்ப எனக்கும் அந்த கேள்வி வந்தது, இந்த உலகம் உருப்படுமா?  ஆனா இப்ப நீ உன் கையால் சில குப்பைகளை எடுத்துக் கூடையில் போட்டதைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை வந்திட்டது. இந்த உலகம் உருப்பட்டுவிடும்பா!  எந்த சந்தேகமும் வேண்டாம். இப்படி ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்!

('அமுதம்' மே  2013 இதழில் வெளியானது)
<<<>>>
 
(படம்:நன்றி-கூகிள்) 
 <<>> 

15 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான கதை
சீர்திருத்தங்கள் முதலில்
நம்மிடமிருந்து துவங்குதல்தானே
சரியாய் இருக்கமுடியும்
மனம் கவர்ந்த பதிவைத் தந்ததற்கும்
தொடரவும் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

// இப்படி ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்!”//

அருமையான விழிப்புணர்வு தரும் பதிவு. மிகப்பெரிய விஷயத்தை மிகச்சிறிய கதை மூலம் சொல்லியுள்ளது அழகு!

Anonymous said...

நல்ல கருத்துள்ள கதை.

கலியபெருமாள் புதுச்சேரி said...

சுயநலத்தோடு கொஞ்சம் பொதுநலமும் பேணுவோம்.அருமையான பதிவுக்கு நன்றி

Mahi said...

சும்மா கண்ணால் பார்த்துப் புலம்பிக்கொண்டே இருப்பதை விட களத்தில் இறங்கி வேலை செய்தால் எல்லா விஷயங்களுமே உருப்பட்டுவிடும்! :) நல்ல பகிர்வுங்க!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துள்ள கதை.....

சிறப்பான பகிர்வு.

தி.தமிழ் இளங்கோ said...

// இப்படி ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக் கிறதுக் குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்! // - நல்ல சிந்தனை.

கோமதி அரசு said...

இப்படி ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்!//

ஆம், கண்டிப்பாய் உருப்பட்டுவிடும். நம்பிக்கை வளர்க்கும் கதை மிக அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கதை

aavee said...

//ந்த சந்தேகமும் வேண்டாம். இப்படி ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்!”//

கடைசில பஞ்ச் டயலாக் பேசுற தாத்தா அவரே குப்பையே எடுத்து போட்டிருந்தா நல்லா உதாரணமா இருந்திருக்கலாம் ங்கறது என் தாழ்மையான கருத்து..

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்!”

நம்பிக்கை தந்த இளைய தலைமுறை வாழ்க..!

கீதமஞ்சரி said...

நச்சென்று மனத்தில் ஆணி அறைந்தாற்போல அழகாயொரு கருத்தை கதையாகச் சொன்னமை சிறப்பு. பாராட்டுகள் ஜனா சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கதை....

ரிஷபன் said...

ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும் :)

கதை மிக அருமை.

Ranjani Narayanan said...

Charity starts at home இல்லையா? நாம் திருந்தினால் உலகமும் திருந்தும். உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எங்களுடனும் மனம்விட்டு பேசுகிறார்கள். அதுதான் உங்கள் எழுத்த்துக்களின் வெற்றி என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!