Monday, July 7, 2014

அவள் - 5


23
எழில் என்றதும்
மனம்
எழுதுகிற உருவம்
எப்போதும் உன்னுடையது.

24
வீசிய பார்வைச் சொடுக்கில்
தடுக்கி
வீழ்ந்தவனை நோக்கி
வீசும் பார்வையோ இது?

25
தென்றலுடன் வளர்ந்தாய்
தேனிசையின் தோழியென்றாய்
தெவிட்டாத கவியானாய்.

26
உன்னில் தொடங்கிய
என் கவிதை
உன்னில் முடிகிறது.

27
எங்கேயும் போய்விட முடியாது நான்
உன் அன்பு சாம்ராஜ்யம்
எல்லையற்று
வியாபித்திருப்பதால்.

28
இரண்டு விழிகள் தாம்
ஆனால் அவை
இடுவதென்னவோ
ஈராயிரம்
கணைகள்!

29
எங்கோ செல்லும்
உன் பார்வையிலும் பட்டு
ஏதோ ஒன்று
உயிர்ப்பிக்கப் படுகிறது.


><><><
(படம்- நன்றி: கூகிள்)

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை,

நினைத்தாலே இனிக்கும் ‘அவள்’ அவளே தான் !

இராஜராஜேஸ்வரி said...

தென்றலுடன் வளர்ந்தாய்
தேனிசையின் தோழியென்றாய்
தெவிட்டாத கவியானாய்.

அழகான வரிகள்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

காதல் கவிதைகளுக்கு ஒரு மார்கட்டிங்தான் ஐயா மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அவள்.....

தந்த கவிதைகள் அனைத்துமே அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

எல்லையற்ற அன்பு சாம்ராஜ்யம்
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

26, 27 மிகவும் ரசித்தேன்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!