Saturday, September 20, 2014

கொஞ்ச நேரம்...



இதோ இந்த பார்க் பெஞ்சில்
இருந்துவிட்டுப் போகிறேன்  ஓர்
இரண்டு மணி நேரம்.
பக்கத்தில் அமருகிறவர்கள் 
பாதிக்குமேல் என் இடத்தை 
பிடுங்கிக்கொள்ளக்கூடும்.
தலையணை கொண்டுவந்து தரவும் கூடும்.
வம்பு வளர்ப்பவர்களாகவோ
அறிவு வளர்ப்பவர்களாகவோ...
வெகுண்டு வாதிடுவானேன் அவர்களுடன்?
மௌனப் போராட்டமும் தன்னையே வதைக்கும்.
சிரிப்பொன்றை சிந்திவிட்டுப் போகிறேன்.
சீற்றம் காட்டுவதால்
சிறிதும் வசப்படப் போவதில்லை சூழ் நிலை.
இன்முகமும் எனக்கொன்று உண்டென்பதை 
எப்போது யாரிடம்தான் தெரிவிப்பது?
சிரிப்பில் கரைந்துவிடும் 
சிந்தனையின் சகல சிக்கல்களும் என்பதை
வேறெப்போதுதான் கண்டு கொள்வது?
><><><




6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிரிப்பில் கரைந்துவிடும் சிந்தனையின் சகல சிக்கல்களும் //

கொஞ்ச நேரம் ... கொஞ்சக்கூடிய நேரமாகவே இருக்கட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

சிரிப்பொன்றை சிந்திவிட்டுப் போகிறேன்.
சீற்றம் காட்டுவதால்சிறிதும் வசப்படப் போவதில்லை சூழ் நிலை.

சிறப்பான சிந்தனை.!

கரந்தை ஜெயக்குமார் said...

//சீற்றம் காட்டுவதால்
சிறிதும் வசப்படப் போவதில்லை சூழ் நிலை.//
உண்மை
அருமை
நன்றி நண்பரே

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

/சீற்றம் காட்டுவதால்
சிறிதும் வசப்படப் போவதில்லை சூழ் நிலை./

சத்தியமான வார்த்தைகள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை. ரசித்தேன்.

மனோ சாமிநாதன் said...

அருகில் அமர்பவரிடம் இன்முகமும் சினேக சிரிப்புமாய் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அழகிய கவிதை!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!