Friday, October 17, 2014

நல்லதா நாலு வார்த்தை - 37



’அனேக விஷயங்களை 
அதிவிரைவில் செய்ய ஒரே வழி, 
ஒரு சமயத்தில் 
ஒரு விஷயத்தை மட்டுமே செய்வது!’
- Anonymous
(‘The quickest way to do many things is
to do only one thing at a time.’)

<>

'அன்பான இதயமே
அனைத்தறிவின்
ஆரம்பம்!’
- Thomas Carlyle
(‘A loving heart is the
beginning of all knowledge.’)

<>

’பிறருக்காக வாழ்கையில் 
பின்னும் கடினமாகிறது வாழ்க்கை,
ஆனால் அது மாறுகிறது
இன்னும் செழிப்பாகவும் இன்பமாகவும்!’
- Albert Schweitzer
(‘Life becomes harder for us when we live for others,
but it also becomes richer and happier.’)

<>

'ஒளியும் இருளும் கலந்த 
ஒவ்வொரு கணமும் 
ஓர் அதிசயம்.’
- Walt Whitman
(‘Every moment of light and
dark is a miracle.’)
<>

’எதிர்காலத்தைப் பற்றிய 
மிகச் சிறந்த விஷயம்
என்னவென்றால் அது 
ஒரு தடவைக்கு 
ஒரு தினமாகவே வருகிறது.’
- Abraham Lincoln
(‘The best thing about the future is
that it comes one day at a time.’)
<>

’வாழ்க்கை எதற்காக என நான்
வருந்திச் சிந்தித்ததுண்டு;
உயிரோடிருப்பதே போதுமான காரணம் என
உணருகிறேன் இப்போது.’
- Joanna Field
(’I used to worry about what life was for
– now being alive seems sufficient reason.’)
<>
'உங்கள் அன்பளிப்புகளை விட 
உங்களை அளிப்பதையே 
உவந்து மிக வேண்டுகிறார்கள் 
உங்கள் குழந்தைகள்.’
- Jesse Jackson
(’Your children need your presence
more than your presents.’)
><><><
(படம் - நன்றி; கூகிள்)

8 comments:

கோமதி அரசு said...

அனைத்து பொன்மொழிகளும் அருமை.

பிறருக்காக வாழ்கையில்
பின்னும் கடினமாகிறது வாழ்க்கை,
ஆனால் அது மாறுகிறது
இன்னும் செழிப்பாகவும் இன்பமாகவும்!’
மிகவும் பிடித்தது இந்த பொன்மொழி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அருமையான கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

’அனேக விஷயங்களை
அதிவிரைவில் செய்ய ஒரே வழி,
ஒரு சமயத்தில்
ஒரு விஷயத்தை மட்டுமே செய்வது!

சிங்கிள் ட்ராக் மைண்ட் --
தியானத்திற்குச்சமமான ஆற்றலை அளிக்கிறது,,!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான மொழிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்து அருமை. எனக்கு மிகவும் பிடித்ததும், ஏற்றுக்கொள்ளக் கூடியதும், நான் பின்பற்றுவதும், முதலில் சொல்லியுள்ள முத்தான ஒன்றே .........

//’அனேக விஷயங்களை அதிவிரைவில் செய்ய ஒரே வழி, ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தை மட்டுமே செய்வது!’//

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

சிறப்பான சிந்தனைத் துளிகள். அருமையான தமிழாக்கம்.

ரிஷபன் said...

எதிர்காலத்தைப் பற்றிய
மிகச் சிறந்த விஷயம்
என்னவென்றால் அது
ஒரு தடவைக்கு
ஒரு தினமாகவே வருகிறது.’// :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!