Friday, September 11, 2015

கண்ணுக்குக் கண்ணாக…(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம்... 
”இரு இரு, யமுனா, நீ ஏதோ ஐடியா பண்ணிட்டே… தொடர்ந்து எப்பவும் நீயே ஜெயிக்கிறே! மூணு தடவை ஆச்சு. ரியலி சம்திங் தேர்…”
”அதெப்படி? நான் ஒண்ணும் ட்ரிக் பண்ணலியே உங்க கண்ணால பார்த்துதானே சொல்றீங்க?”
அதென்னவோ உண்மைதான். அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“ஒரு மைக்ரோ அவன் வாங்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?” என்றுதான் முதல் தடவை வந்தாள்.
லேப் டாப்பிலிருந்து தலையை எடுத்த வினோத், ”இப்ப எதுக்கு?” என்று  தொடங்குவதற்குள்…
“இத பாருங்க, ஆர்க்யூ பண்ணவேண்டாம். ஒரு நிமிஷம் கண்ணை மூடுங்க கருப்பா ஒரு ஷேப் கற்பனை பண்ணுங்க. சதுரம் தோணிச்சுன்னா வாங்கிக் கொடுங்க, வட்டம் தோணிச்சுன்னா வேணாம். உங்களுக்கு வட்டம் எனக்கு சதுரம் சரியா? கண்னை மூடுங்க,”
மூடித்தான் பார்க்கலாமே… மூடினான். சதுரம் தோன்றியது. வென்றாள் அவள்.
இப்படித்தான் ஆரம்பித்தது. ஒவ்வொரு தடவையும் சதுரமே வந்தது அவளே ஜெயித்தாள்.
என்னமோ தந்திரம் இருக்கு என்று நினைத்தான். ஆனால் என்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
”நிச்சயமா ஏதோ ஐடியா பண்றே!”
“ஐடியாவா? இனிமேல்தான் பண்ணப் போறேன். சரி, இப்ப ஒரு நிமிஷம் கண்ணை மூடுங்க. என்ன தெரியுது? ஸ்குயரா சர்க்கிளா?
”ஆமா, விஷயம் என்ன, அதை சொல்லலியே?”
”அது அப்புறம்! முதல்ல சொல்லுங்க”
சொன்னான், ”வழக்கம் போல சதுரம் தான் தெரியுது!”
“அதான் வரும். சொல்லப்போற விஷயமும் அதான்.”
“என்ன சொல்ல வர்றே?”
“இப்படி எப்பவும் கம்ப்யூட்டர் திரையையே கண்டினிவஸா பார்த்திட்டிருந்தா கண்ணை மூடினாலும் அதான் வரும். உங்க கண்ணை எப்படி இந்தப் பழக்கம் கெடுக்குதுன்னு காட்டறதுக்குத்தான் இப்படி நாலு தடவை பெட் கட்டினேன்.”
விஷயம் புரிந்தது அவனுக்கு.
“அதனால இனிமேல் இடையிடையே தேவையான அளவு ரெஸ்ட் கொடுக்கிறதா இருந்தால் மட்டும்தான் வீட்டில் நீங்க லேப்டாப்பை தொடணும். இதுதான் இப்ப  நீங்க தோற்றதுக்கு!”
”கண்டு கொள்ள வேண்டிய உண்மையை கண்ணுக்கு நேராகக் காட்டி விட்டாய், அப்புறம் மறுப்பு ஏது?” என்றான் வினோத். 
('அமுதம்’ செப் 2014 இதழில் வெளியானது - நிமிடம் 87)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
அருமை
நன்றி
தம +1

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

அருமை...

G.M Balasubramaniam said...

அப்படியும் இருக்கும் போல் இருக்கிறதே. என் வலைத் தளம் வருகைதரவும் கதைப்போட்டியில் பங்கு பெறவும் அழைப்பு,

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!