Monday, May 23, 2016

நல்லதா நாலு வார்த்தை... 68

'அறவே பயனற்ற ஓரு பிற்பகலை 
அறவே பயனற்ற ஒரு விதத்தில் 
உங்களால் கழிக்க முடியுமாயின்
எப்படி வாழ்வதென்பதைப் பயின்று விட்டீர்கள்.’ 
- Lin Yutang
('If you can spend a perfectly useless afternoon in a
perfectly useless manner, you have learned how to live.')
<>

'வீடிருந்து என்ன பயன்
அதை வைத்திட  
ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர்
கிரகம் உங்களுக்கு இல்லையெனில்?’
- Thoreau
(”What is the use of a house if you haven't got
a tolerable planet to put it on?’)
<>

’வாழ்வில் விரும்பும் அனைத்தும் 
நீங்கள் அடையலாம் 
மற்றவர் விரும்புவதைப் பெற்றிட
சற்றே உதவுவீராயின்.'
- Zig Ziglar
('You can have everything in life you want, if you
will just help other people get what they want.')
<>

'ஆனந்தம் அடைய வழி ஓர்
அன்புப் பசை வலையை 
சிலந்திபோல தன்னிடமிருந்து
அனைத்து திசைகளிலும் விரித்து,
வரும் அனைத்தையும் 
அதில் பற்றிக் கொள்வது.’
- Leo Tolstoy
(”The means to gain happiness is to throw out from oneself like a spider
in all directions an adhesive web of love, and catch in it all that comes.’)
<>

’வாய்ப்பில் 
வசிக்கிறேன் நான்.’
- Emily Dickinson
('I dwell in possibility.')
<>

'சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லையே 
என கவலை கொள்ளாதீர்கள்; 
சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே 
என்று கவலைப் படுங்கள்.'
- Chinese Proverb
('Be not disturbed at being misunderstood;
be disturbed rather at not being understanding.')

<>

’தரம் என்பது 
தற்செயலாக அமைவதல்ல.
அது எப்போதுமே  
அறிவார்ந்த முயற்சிகளால் விளைவது.’
- John Ruskin
('Quality is never an accident. It is always
the result of intelligent effort.')
<>

'எவர் கருத்துக்களை நாம் மதிக்கிறோமோ
அவரால் தவறாகப் புரிந்துகொள்ளப் படுவது 
எல்லாவற்றிலும் மிக வலி தருவது.'
- Gloria Steinem
('Being misunderstood by people whose opinions
you value is absolutely the most painful.')
<>

'எல்லாருக்கும் அளிக்கப்படுகிறது
இடர்ப்பாடுகள் வாழ்வில். 
எவரின் பயணமும் எளிதல்ல.
எப்படி அவற்றைக் கையாளுகிறார்கள்
என்பதே அவர்களை 
தனித்தன்மை வாய்ந்தவர்களாக்குகிறது.’
- Kevin Conroy
('Everyone is handed adversity in life. No one's journey
is easy. It's how they handle it that makes people unique.')
<>

’வெற்றியடைய என் தீர்மானம்
வேண்டுமளவு உறுதியாயிருந்தால்
தாண்டிச் செல்ல முடியாது என்னை தோல்வி'.
- Og Mandino
('Failure will never overtake me if my determination
to succeed is strong enough.')

><><><

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொன்றும் அருமை

ஹ ர ணி said...

அருமையாக உள்ளது ஜனா. தொடர்ந்து மொழிபெயருங்கள். பயனான மேற்கோள்கள்.

மோகன்ஜி said...

நல்ல மொழிகளை நல்ல விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!